டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

 செப். 9-ல் திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள ஷ்ரீ தர்மராஜா, ஷ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம் செப். 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:38 am

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள ஷ்ரீ தர்மராஜா, ஷ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம் செப். 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அரும்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஷ்ரீ தர்மராஜா, ஷ்ரீ திரெüபதி அம்மன் கோயில் தேரோட்டத்தை யொட்டி, கடந்த 30 ஆம் தேதி குடியழைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 31 ஆம் தேதி மாரியம்மனுக்கு பால்குடம், பொங்கல், மாவிளக்கு பூஜைகளும், 1 ஆம் தேதி பெரியசாமி கோயிலுக்கு பொங்கல், மா விளக்கு பூஜையும் நடைபெற்றது.

  தொடர்ந்து, 2 ஆம் தேதி ஷ்ரீ அங்காளம்மன், பெரியாண்டவர் கோயிலுக்கு பொங்கல் மா விளக்கு பூஜையும், 3 ஆம் தேதி திருக்கல்யாணமும், 4 ஆம் தேதி ஷ்ரீ தர்மராஜ், திரெüபதி அம்மனுக்கு பால் குடம், பொங்கல், மா விளக்கு பூஜையும், 5 ஆம் தேதி கிருஷ்ணர் தூது விழாக்கோலமும், ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை மாலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ப. கெüதமன், கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.